இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது : புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று
தற்போதைய பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் டிசம்பர் மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைக்கப்படும்.
அதற்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , உருவாக்கப்படும் காபந்து அரசின் முக்கிய 15 அமைச்சுகளை , நியமிக்கப்படவுள்ள 4 புதிய கெபினட் அமைச்சர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.
தற்காலிக அமைச்சரவை இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிந்திய செய்தி
பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று (24) நடைபெறவுள்ளது.
வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சியும் இன்று புதிய அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி புதிய அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் இடம்பெறவுள்ளனர்.
இதேவேளை, புதிய அமைச்சு செயலாளர்களும் இன்று நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.