மொட்டு கட்சியினர் எதிர்பார்த்த அளவு வாக்களிக்கவில்லை : ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை என கொழும்பு, அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்ததாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அவர்களுடன் பொதுஜன பெரமுனவின் அதரவாளர்களான மக்கள் வரவில்லை எனத் தெரிவித்ததுடன், பொஹொட்டுவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அனுர திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.