ஜனாதிபதிக்கு ஹெலிகாப்டர், எஸ்கார்ட் ஆம்புலன்ஸ் சட்டம்.. அவற்றை மாற்ற முடியாது..: திருமதி விஷாக சூரியபண்டார
குடியரசின் முதல் பிரஜையான நிறைவேற்று ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியாக தனியான பாதுகாப்பு வேலைத்திட்டம் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான கற்கைகள் பிரிவின் தலைவர் திருமதி விஷாக சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள திட்டத்தை சட்ட ரீதியாக மாற்றும் வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதியின் பயண முறைகளை ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையினர் தீர்மானிப்பதாகவும், ஹெலிகாப்டர்கள், எஸ்கார்ட் ஆம்புலன்ஸ்கள் உட்பட அனைத்தையும் அவர்களால் பாதுகாப்பு தறையினரால் தீர்மானிக்கப்படுவதாகவும் , அந்த முடிவை ஜனாதிபதி எடுக்க முடியாது என அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அரசியலமைப்பு மாற்றப்பட்டு பொருத்தமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் அவற்றை மாற்றுவது சாத்தியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இல்லையெனில், அதை மாற்றுவது, நிர்வாகத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான துறைத் தலைவர்களின் கடமை தவறிய செயலாகவே பார்க்கப்படும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதன் பொறுப்பு பாதுகாப்பு துறையினரது தலையில் விழும் என்றார்.
தெரண தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.