முகக்கவசம் அணிவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு.
இன்று கான்கேசன்துறை பொலீசாரின் ஏற்பாட்டில் தெல்லிப்பழை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் அனுசரணையுடன், முககவசம் அணிவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று தெல்லிப்பழை சந்தி பகுதியில் நடத்தப்பட்டது.
இதன்போது முக கவசம் அணியாமல் பயணித்த சுமார் 700க்கு மேற்பட்ட பாதசாரிகளுக்கு முக கவசங்கள் இலவசமாக வினியோகிக்க பட்டது. இந்த நிகழ்வில் கான்கேசன்துறை பொலீசார் மற்றும் சங்கத்தின் தலைவர்,பொதுமுகாமையாளர், பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.