வவுனியாவில் ஓரே தடவையில் மூன்று வாகனங்கள் விபத்து.
வவுனியா நொச்சுமோட்டைப்பகுதியில் இன்று(9) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பிக்கப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த காருடன் மோதியதாகவும் பின்னர் பாரஊர்தியிலும் மோதுண்டதாகவும் தகவல்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.