முன்னாள் ஜனாதிபதிகளை வீடுகளில் இருந்து வெளியேற்ற கால அவகாசம் எடுக்கும்.. சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்..
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை குறைப்பதற்கு சட்டரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளன.
அவற்றைக் குறைக்கும் வகையில், சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளதால், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பிறகு அதைச் செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடையில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் மற்றும் ஏனைய சலுகைகளை இரத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் உரிய சலுகைகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை குறைப்பதற்கான அளவுகோல்களை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.