வரியில்லா டீசல் விலை திருத்தம் மூலம் 100 ரூபாய்க்கு கிடைக்க செய்யலாம்: காஞ்சனா விஜேசேகர.

கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு அமுல்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட பல யோசனைகளை ஜனாதிபதி அமுல்படுத்தியமைக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ரணில் அரசில் அமுல்படுத்திய உர மானியத்தை 25 ஆயிரம், மீனவர்களுக்கான எரிபொருள் மானியம், சோலார் பேனல் திட்டத்தை இந்திய அரசின் உதவியுடன் செயல்படுத்துவது போன்றவற்றை அனுர திசாநாயக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த தேர்தலின் காரணமாக, பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தால் தேர்தல் காரணமாக தற்காலீகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதை தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

நல்ல வேலைத்திட்டங்களுக்கு தனது ஆதரவை என்றும் வழங்குவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு லீற்றர் எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட சுமார் 150 ரூபா வரியை நீக்கிவிட்டு, ஒரு லீற்றர் டீசலை 100 ரூபாவிற்கு வழங்க முடியும் என கடந்த தேர்தல் மேடையில் தெரிவித்த பிரகடனங்களை தற்போது நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து வரிகளும் நீக்கப்பட்டால் ஒரு லீற்றர் டீசலை நூறு ரூபாவிற்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.