இளம்பெண்ணின் உயிரைக் காத்த போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி.

மன்னார்   போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி மல்லசேகர (41308) என்பவரின் துரித நடவடிக்கையினால் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் காப்பாற்றபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இன்று (29.09) ஞாயிறு,காலை மன்னார் நகரில்  அமைந்துள்ள பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதகாரி  மல்லசேகர (41308 )பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் ஒன்றுடன்  வந்துள்ளார்.

 பின்னர் அந்தப்  பெண்  குறித்த பொலிஸ் அதிகாரியிடம்  தமிழ் தெரியுமா? எனக் கேட்டுள்ளார். அதற்கு  அந்த அதிகாரி, நீங்கள் யார் என்று தமிழில் கேட்க   அந்தப் பெண்,தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைப் பொலிஸ் அதிகாரியின்  மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.

குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளப் போவதை ஊகித்த பொலிஸ் அதிகாரி அப்பெண்ணைத் துரத்திச் சென்றுள்ளார்.

அப்போது அந்தப்  பெண் பாலத்தின் பாதுகாப்புச்  சுவரில் ஏறில் கடலில் குதிக்கத் தயாரான நிலையில், பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் காலில் பிடித்துக் காப்பாற்றியுள்ளார்.

குறித்த இளம்பெண்  மன்னார் பொலிஸ், மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.