ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு : பிரியங்காவின் பேரணி ரத்து

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா, பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லாலுக்கு ஆதரவு திரட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைப்பட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின் இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ்- என்சிபி கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய காஷ்மீர் வந்த நிலையில், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்கா காந்தியை பேரணியில் பங்கேற்க விடாமல் பாஜக திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவீந்தர் சர்மா, பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.