இஸ்ரேலைத் தாக்கிய ஈரான்: உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்தது.

உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது.

ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் ஐந்து விழுக்காடு வரை உயர்ந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அது.

மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகத்துக்கு வரும் எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

தினமும் மூன்று முதல் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான்.

Leave A Reply

Your email address will not be published.