முன்னாள் அமைச்சரின் சகோதரர் கைது.

கட்டான பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்த ஓமன் வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களை நாசம் செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்து 01ம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளார். .

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு, கட்டானவில் ஆடைத் தொழிற்சாலை நடத்தி வந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர், ஓமானியர் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்து, அவரை கொடூரமாகத் தாக்கி, சொத்துக்களை அழித்தார்.

இந்த தொழிலதிபருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையின் போக்குவரத்துக்கு லொறிகளை பயன்படுத்தியமை தொடர்பான தகராறே தாக்குதலுக்கு காரணம்.

இந்தச் சம்பவத்தில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தலையிட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வர்த்தகர் மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் தொடர்பில் கந்தானை பொலிஸார் முன்னர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.