மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் போட்டிக்கு தயார் இல்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அடங்குவர்.

ஏனைய அமைச்சர்களில் சுமார் 5 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளதாக எமக்குத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் சுமார் 25 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது நண்பர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமின்றி எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு ஒன்று கட்சி மாறி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.