முட்டை விலை குறைவது நல்லதல்ல..- விவசாய அமைச்சின் செயலாளர் கவலை.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபா வரையில் பராமரிக்கப்படாவிட்டால் தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க , தொழில்துறைக்கு தேவைப்படும் கோழி தீவனத்தின் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை குறைந்தால் ஒரு முட்டையை 29 முதல் 30 ரூபாய் வரை சந்தையில் விற்க முடியும் என்றார்.

ஆனால் ஒரு முட்டை உற்பத்திக்கு 32 – 33 ரூபா செலவாகும் எனவும் அதில் பெரும்பாலானவை கோழித் தீவனத்திற்காக செலவிடப்படுவதாகவும் கூறும் செயலாளர், அந்த உணவின் விலை சுமார் 80% சோளத்தின் விலையில் தங்கியிருப்பதனால் பிரச்சினை உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.