திருமண உதவித்தொகை திட்டம்..தமிழக அரசு அதிரடி!

திருமண உதவித்தொகை திட்டத்தின் மூலம் பயன்பெற 21 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு
தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கா இலவச பேருந்து,மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோரின் மகள்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்ததிட்டத்தின் மூலம் கல்வித்தகுதி இல்லாத திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இதுவே பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டம் தான் இலவச திருமண திட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

புதிய திட்டம்

இந்தத் திட்டத்தின் மூலம் திருமணம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்பாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். 18 வயது எட்டிய பெண்ணும். 21 வயதுடைய ஆணும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

கோவில் ஆவணம், காவல்துறையின் சான்றிதழ் , வருமான சான்றிதழ் , குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தாரின் புகைப்படங்கள்.

மணமகன் மற்றும் மணமகளின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வழங்க வேண்டும்.அடுத்ததாக ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.