ரஞ்சன் SJB யை விட்டு வெளியேறி, புதிய கட்சியுடன் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதியின் முழு மன்னிப்புக்காக காத்திருப்பு..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க SJB யில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியுடன் மீண்டும் போட்டியிடத் தயார் என அவர் குறிப்பிடுகின்றார். “ஐக்கிய ஜனநாயகக் குரல்”  (UDV)என்று கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரையறுக்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

அதன்படி, பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு உரிமை இல்லை.

அதற்கான அனுமதியை புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அரசியல் கட்சி கொழும்பில் இன்று (9) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மைக் சின்னத்தில்  ரஞ்சன் ராமநாயக்க தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்ட போது கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் திலக்ரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.