வாகனங்கள் இறக்குமதிக்கு எந்த ஆயத்தமும் இல்லை.. வங்கிகளுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.

ஒக்டோபர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கத் தயார் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பேருந்துகள் மற்றும் லொறிகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வதந்தி பரவி வருகின்ற போதிலும் அவ்வாறான சுற்றறிக்கையோ அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமோ இறக்குமதி கட்டுப்பாட்டாளர் அல்லது வங்கிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படவில்லை என அதன் தலைவர் பிரசாத் மானகே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என தமது தொழிற்சங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2020ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களின் விலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

இதனால் வாகனங்களை இறக்குமதி செய்தாலும் விலையில் பெரிய சரிவு ஏற்படாது என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் மதிப்பு 80 வீதத்தால் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.