கடைசி நிமிடத்தில் வேட்புமனுப் பட்டியலில் இருந்து நடிகை தமிதாவின் பெயரை நீக்கிய சஜித் தரப்பு : இரத்தினபுரிக்கு சென்ற தமிதா மனம் நொந்து திரும்பினார்

இரத்தினபுரி மாவட்டத்தில் SJB யை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அறிவித்த தமிதா அபேரத்ன, வேட்பு மனுவில் தனது பெயர் இல்லாத காரணத்தினால் நேற்று (11) இரத்தினபுரிக்கு வேட்பு மனுவில் கையொப்பமிட சென்றவர் விரக்தியோடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்ட பொதுச் செயலாளர் அலுவலகத்திற்குச் செல்லும் வரை வேட்பு மனுப் பட்டியலில் தனது பெயர் இல்லை என்பது அவருக்குத் தெரியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் SJBயில் இருந்து இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியின் வேட்பு மனுப் பட்டியலில் அவர் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தமிதா அபேரத்னவின் பெயர் இல்லாமல் இரத்தினபுரி மாவட்டத்திற்கு போட்டியிடும் SJBயின் வேட்புமனுப் பட்டியலை அந்த மாவட்ட SJB தலைவர் ஹேஷா விதானகே , இரத்தினபுரி மாவட்ட செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான வசந்த குணரத்னவிடம் கையளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.