மாவை சேனாதிராஜா கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகினார்!

தமிழரசுக் கட்சியின் ( ITAK ) முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (12) முதல் கட்சியின் தீர்மானங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளார்.

சிறிது காலம் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் விபரம் கேட்ட போது , வேட்புமனுத் தயாரிப்பின் போது இடம்பெற்ற பல சம்பவங்களால் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மிகவும் கவலையடைந்துள்ளதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் வேட்புமனு வழங்குவதில் இருந்து விலக்கப்பட்ட ஒரு குழுவினர் தமிழரசுக் கட்சியின் வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளமையே இந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு இது குறித்து தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், பிரிந்திருந்த தமிழரசுக் கட்சியை மீண்டும் இணைக்க முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா பெரும் முயற்சி மேற்கொண்டார், ஆனால் கட்சிக்குள் இருந்த இரண்டு உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் மாவை சேனாதிராஜா மிகவும் வருத்தமடைந்ததாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.