மன்னாரில் ஐந்து நபர்களுக்கு கொரணா தொற்று உறுதி.

மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்த கொரோனா தொற்று பரிசோதனை விபரங்களை வெளியிடும் ஊடக அறிக்கையின் அடிப்படையில் இன்று பி.பகல் 6.30 மணிவரையான ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், வட மாகாணத்தின் பல பாகங்களிலும் இருந்து 210 பேரிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் யாழ் போதனா ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டிருந்த நிலையில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தொற்று உறுதியான ஐவரும் மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுப்பவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.