அர்ஜூன் அலோசியஸுக்கு 6 மாத சிறை
WM மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் VAT செலுத்தாதது தொடர்பான வழக்கு தொடர்பாக கொழும்பு மாவட்ட நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நிலுவைத்தொகையை செலுத்துமாறு 14.11.2023 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறியதால், உரிய வரிகளை இன்று செலுத்தாவிட்டால் ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.