ஷானி அபேசேகர : மீண்டும் அவர் பணிக்கு அழைக்கப்பட்டது ஏன்?

உயிர் அச்சுறுத்தல்கள், எதிர்பாராத சிறைத்தண்டனைகள் மற்றும் பல்வேறு அநீதிகளுக்கு உள்ளான புகழ்பெற்ற புலனாய்வு அதிகாரியாகக் கருதப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (ஓய்வுபெற்ற) ஷானி அபேசேகர புதிய அரசாங்கத்தினால் புதிய பொறுப்பொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வெளியே வேறொரு பிரிவுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் இயக்குநர் பதவி அது.

இதன் கீழ், குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் விசாரணைகளை நடத்துவது அவரது முக்கிய பொறுப்பாக இருக்கும்.

அக்டோபர் 10, 2024 அன்று நடைபெற்ற கமிஷன் அமர்வில் அவரது நியமனத்தை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பூரண அனுமதியுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஷானி அபேசேகர பிபிசி சிங்களத்துடன் பேசுகையில், எதிர்காலத்தில் உரிய பதவியை தாம் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் துரிதப்படுத்த விரும்பும் 7 விசாரணைகள் யாவை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தார்.

நீர்கொழும்பு , கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார்.

இவைகளின்படி, பிணை முறி கொடுக்கல் வாங்கல் சம்பவம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

* ஈஸ்டர் தாக்குதல் விசாரணை

* 2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய Bond பத்திர ஒப்பந்தம்

* தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம்

* 2007ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் காணாமல் போன சம்பவம்.

* 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெலிகம பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்.

* 2005 இல் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் என்ற தராக்கி கொலை

* 2011 இல் யாழ்ப்பாணத்தில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் (லலித் – குகன்) ஆகிய சமூக ஆர்வலர்கள் காணாமல் போன சம்பவம்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அண்மைக்காலமாக என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பி.அம்பாவில புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது இதுவரையில் அந்த பதவியில் இருந்த ரொஹான் பிரேமரத்னவை மேற்கு வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில பணமோசடி (நிதிப் புலனாய்வுப் பிரிவு 02) தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் பொலிஸ் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் மெய்நிகர் நாணயங்களை விசாரிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கியில் நிறுவப்பட்ட விசேட புலனாய்வுப் பிரிவுகளின் கடமை மேற்பார்வை நிலையில் முன்னர் பணியாற்றினார்.

ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன?

* ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்

* ரகர் வீரர் வாசிம் தாஜுதீன் கொலை

* கொழும்பைச் சுற்றி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்.

* பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை

* ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை

* ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு போன்ற விசாரணைகள்

* ராயல் பார்க் படுகொலை

* அங்குலான இரட்டைக் கொலை

*உடதலவின்ன கொலை

* முகமது சியாமியின் கொலை

பல சர்ச்சைக்குரிய கொலைகளின் மர்மங்களை வெளிப்படுத்திய விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரி என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை அழைக்கலாம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நியமனத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2005-2015 ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு மீள் விசாரணைகள் ஆரம்பமாகியதுடன், ஷானி அபேசேகர மற்றும் நிஷாந்த சில்வா உள்ளிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைகளை பொறுப்பேற்றனர்.

அப்போது, ​​ராஜபக்சவையும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளையும் கைது செய்ய அரசியல் அழுத்தத்தின் பேரில் அவர்கள் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், அதை மறுத்து, சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதை மட்டுமே செய்கிறோம் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், 2019 நவம்பரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியைக் கோரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

இடமாற்றம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் அவரது மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன, மேலும் அவர் இந்த விவகாரம் குறித்து ஆராயும் சிறப்பு நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளித்தார்.

ஷானியின் நியமனம் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் கேள்விக்குரிய முடிவு

தவறான நேரத்தில் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக உழைத்த ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய ஷானி அபேஸ்கராவை நியமித்தமை மிகவும் சர்ச்சைக்குரிய கேள்விக்குரிய தீர்மானம் எனவும் , இது போன்ற ஒரு முக்கியமான தேர்தல் பிரச்சார காலத்தில் ஒரு போலீஸ் பிரிவின் இயக்குனர் பதவிக்குஅந்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.