பேரிடர்களைப் பற்றி தெரிவிக்க தொலைபேசி எண்கள்!
அவசர நிலை தொடர்பில் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீங்கள் 011 21 36 136, 011 24 36 222 மற்றும் 011 26 70 002 ஆகிய எண்களுக்கும் அழைக்கலாம்.
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 34,429 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 மாவட்டங்களிலும் 69 பிரதேச செயலகங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1753 குடும்பங்களைச் சேர்ந்த 6963 பேர் 81 தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.