ராஜினாமா செய்து விட்டு , தேசிய பட்டியலில் என்னை எடுங்க… ரஞ்சித் மத்துமபண்டாவிடம் தமிதா சவால்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துபண்டா சொல்வது போல, நடிகை தமிதாவின் பெயர் , தொடர்பாடல் பிரச்சினையால் வேட்பு மனுப் பட்டியலில் இருந்து விலக்க காரணமானதாக இருந்தால் , தேசியப் பட்டியல் மூலம் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு நடிகை தமிதா அபேரத்ன இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயல்பாடுகள் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து நீண்ட பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்த அவர் அரசியலில் இருந்து விலகி ஒதுங்கப் போவதாகவும் இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தன்னை தவறாக பாவித்ததா என இப்போது யோசிப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து நான் முறைப்பாடு கூட செய்யவில்லை என பொதுச்செயலாளர் கூறியது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய தமிதா அபேரத்ன, தான் முழு நாட்டுக்கும் கட்சியின் தலைமைக்கும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கட்சியின் தலைமை, சம்பவம் குறித்து நியாயமான விசாரணை ஒன்றை நடத்த உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொள்கைகள் மற்றும் ஜனநாயகம் இல்லாத கட்சியால் தாம் ஏமாற்றமடைந்தாலும், தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தமிதா கூறினார்.

“எல்லா நேரமும் பொய் சொல்வதை என்னால் தாங்க முடியாமல் இந்த உண்மையை வெளியில் சொல்கிறேன். ஹேஷா முன்னமே இரத்தினபுரியில் இருந்து பெண் ஒருவரை அனுப்ப வேணும். அக்கா நீ வேறு இடத்தில் இருந்து கேளு அக்கா என சொல்லியிருக்கலாம். நான் இலங்கையில் எங்கிருந்தும் நியமனம் பெற முடியும். ஆனால் நான் கட்சிக்காக நிபந்தனையின்றி உழைத்த கலைஞர். உண்மையில், அவர்கள் தமிதா அபேரத்னவைக் கொல்ல வேலை செய்துள்ளனர்.

பொதுச்செயலாளர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தகவல் தொடர்பு பிரச்சனையால் இது நடந்தது எனக் கூறுவதை பார்த்தேன். இவை வேடிக்கையானவை. பொதுச் செயலாளரை ஒரு தந்தையைப் போல மதித்தேன். பொது ஊடகங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடாதீர்கள். இது தகவல் தொடர்பு பிரச்சனை இல்லை என்று பொதுச்செயலாளர் கூறுகிறார் என்றால் , அவர், தனது தேசியப்பட்டியலின் இடத்திலிருந்து விலகி எனக்கு அந்த இடத்தை தரச் சொல்லுங்கள் ” என தமிதா அபேரத்ன சவால் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.