ஈஸ்டர் அறிக்கையை வெளியிட்டால் கம்மன்பிலவை 14 வருடங்கள் சிறையில் அடைக்கும் திட்டம்?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதை பகிரங்கப்படுத்தினால் அரசு அவரை , 14 ஆண்டுகள் சிறையில் அடைக்க தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால், அதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் உதய கம்மன்பில .

அதேவேளை, அமைச்சர் விஜித ஹேரத், அது தொடர்பான அறிக்கைகள் கம்மன்பிலவிடம் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு , கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அது நேற்றுடன் முடிவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.