50 கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை! – இந்த வாரம் அறிவிப்பு வரும்.

இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல் இருப்பதற்காக அந்தக் கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்தை மேலதிகமாக அறிவித்து, இலங்கையை மீண்டும் ஒரு தடவை அகெளரவப்படாமல் காப்பாற்ற புதுடில்லி முன்வந்திருக்கின்றது எனத் தெரிகின்றது.

இதற்கான் சலுகைக்கால அறிவிப்பு இந்த வாரத்தில் புதுடில்லியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் தலைவர்கள் சம்பந்தப்படாமல் நேரடியாக இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டு இந்த இணக்க நிலை எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இந்தியாவுக்கு இலங்கை வரும் வாரத்தில் செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா நிலுவையைச் செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு புதுடில்லியில் இருந்து இந்த வாரம் கிடைக்கும் எனத் தெரியவருகின்றது.

அரச உயர்மட்ட வட்டாரத்தில் இது தொடர்பாக பேசப்படாவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுகள் மூலம், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்திய – இலங்கை கடன் உடன்படிக்கையின் கீழ் , இந்திய ரிசர்வ் வங்கிக்கு மொத்தக் கடனாக இலங்கை 2.6 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்.

இதில் சார்க் ஒப்பந்தம், ஏனைய கடன் வசதிகள் மூலம் செலுத்தப்படும் தொகையை விட 1.7 பில்லியன் டொலர்களை (50 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவை) இலங்கை வரும் வாரத்தில் இந்தியாவுக்குக் கடனாகச் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை இந்த வாரத்துக்குள் இலங்கை வழங்க வேண்டும்.

இன்றைய அரசியல் சூழலில், அரசோடு பேச்சு நடத்த முடியாத நிலையில், இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி, கால நீடிப்புக்கு இணக்கம் கண்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் புதிய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பித்து வரும் கலந்துரையாடல்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் பரிமாற்ற ஏற்பாட்டை துரிதமாக நீடித்து உதவ இந்தியா முன்வந்துள்ளது.

இந்த நிலுவையில் உள்ள தொகையானது ஆசிய கிளியரிங் யூனியன் மற்றும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான பொறிமுறையின் கீழ் சுமார் 2.6 பில்லியன் டொலர் மதிப்பிலான சிறப்பு பரிமாற்ற ஏற்பாடுகளின் கீழும் நிலவுகளை வழங்குவதற்கான உடன்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என உத்தியோகபூர்வ வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

நிலுவையிலுள்ள கொடுப்பனவுகளை வழங்குவதற்கான முடிவை இந்தியத் தரப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் இலங்கை அரசுக்குத் தெரிவித்துள்ளது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் உரிய நேரத்தில் அனுப்பப்படும் எனவும் அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கால அவகாசம் எப்போது வழங்கப்படும் என்று கேட்டபோது, புதுடில்லியில் இருந்து வரவிருக்கும் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் அது அறியப்படும் என்றும் அந்த வட்டாரம் கூறியது.

Leave A Reply

Your email address will not be published.