சடலம் சாலையில் …மன்னிப்புக் கேட்ட சவ அடக்க நிறுவனம்.

போலந்தில் சடலத்தை ஏற்றிச் சென்ற சவ ஊர்வல வாகனத்தில் இருந்து உடல் சாலையில் விழுந்த நிலையில் , உடல் ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்ட மற்ற வாகனமோட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடலுக்கு அருகே இருந்த கார் ஓட்டுநர் யார் மீதோ மோதிவிட்டாதாய் அஞ்சியதாகக் கூறினார்.

உடல் சவ ஊர்வல வண்டியிலிருந்து விழுந்தமை பின்னர்தான் தெரியவந்தது.

உடலை எடுத்துச் சென்ற Hades எனும் இறுதிச்சடங்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

வண்டியில் உடல் நகராமல் இருப்பதை உறுதிசெய்யும் கருவி செயலிழந்ததால் உடல் கீழே விழுந்ததாக அது கூறியது.

மாண்டவரையும் , மாண்டவர் குடும்பத்தினரையும் அவமதிக்கும் நோக்கமில்லை என்றும் எப்போதும் கவனமாக நடந்து கொள்வதாகவும் நிறுவனம் அதன் இணையப் பக்கத்தில் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.