McDonald’s ஊழியராக வாக்குச் சேகரித்த டிரம்ப்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா(Pennsylvania) மாநிலத்தில் வாக்குச் சேகரித்த டிரம்ப், அங்குள்ள McDonald’s உணவக ஊழியரைப் போன்று செயல்பட்டார்.

இளம் வயதில் McDonald’s உணவகத்தில் வேலை பார்த்த அனுபவம் தமக்கு உண்டு என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) கூறியிருந்தார்.

அதில் சந்தேகம் எழுப்பிய டிரம்ப் சிறிது நேரம் McDonald’s உணவக ஊழியர் போல் வேலை செய்தார்.

உருளைக் கிழக்கு நறுக்குகளை எண்ணெயில் வறுத்தெடுத்துப் பைகளில் போட்டுக் கொடுத்தார் டிரம்ப்.

60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹாரிஸுக்கும் கொஞ்சம் உருளைக் கிழக்கு நறுக்குகளைக் கொடுக்க விரும்புவதாக வேடிக்கையாகச் சொன்னார் அவர்.

இதற்கிடையே, ஜார்ஜியா (Georgia) மாநிலத்தில் உள்ள இரண்டு தேவாலயங்களில் பிறந்தநாளைக் கழித்தார் ஹாரிஸ். அங்கு நற்செய்திப் பாடல்களைப் பாடி அவர் வாக்குச் சேகரித்தார்.

அடுத்த மாதம் 5 ஆம் தேதி அமெரிக்காவில் தேர்தல். போட்டி கடுமையாக உள்ள மாநிலங்களில் வேட்பாளர்கள் இருவரும் மும்முரமாய் வாக்குச் சேகரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.