வழக்கு பொருள்களை மாற்றிய , கல்பிட்டிய போக்குவரத்து OIC கைது.
ரூபாய்கள் 25 இலட்சத்திற்கு சமமான பீடி இலைக் கையிருப்பினை வழக்கு பொருளாக சுங்கத்துக்கு ஒப்படைக்க லொறியொன்றில் கட்டுநாயக்க நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு இடத்தில் வைத்து, அந்த பீடி இலைக் கையிருப்புக்கு பதிலாக , பயன்படுத்த முடியாத குப்பை பீடி இலைகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது , கல்பிட்டி காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் அதிகாரி மற்றும் லொறி சாரதி நீர்கொழும்பு பகுதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கல்பிட்டி காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் அதிகாரியாக இருந்த 58 வயது உதவி காவல் பரிசோதகர் மற்றும் லொறி சாரதியாக இருந்த கல்பிட்டிய அம்மாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது நபர் ஆகியோராவார்கள்.
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 620 கிலோ பீடிகள் அடங்கிய 20 மூட்டைகள் மற்றும் மஞ்சள் 1276 கிலோ அடங்கிய 40 மூட்டைகள் ஆகியவை லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்தபோது, கடந்த 20 ஆம் தேதி கல்பிட்டி காவல்துறையால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட வழக்கு பொருள்கள் கல்பிட்டிய காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரியின் கீழ் இருந்தன.
காவல்துறையினர் கூறியதாவது, கைது செய்யப்பட்ட அந்த வழக்கு பொருள்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட போது, நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் உள்ள பாழடைந்த பகுதியில் நிறுத்தி வழக்கு பொருளாக எடுத்துச் சென்ற பீடி இலைகள் 620 கிலோ தொகையை இன்னொரு வேனில் ஏற்றி விட்டு , அதற்கு பதிலாக பயன்படுத்த முடியாத குப்பை பீடி இலைகளுடன் மாற்றிக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.