பொலிஸார் லஞ்சம் வாங்கினால் அல்லது பொலிஸாரது ஊழல்கள் குறித்து புகார் தெரிவிக்க பொது மக்களுக்கு ஒரு ஹாட்லைன் எண் , 1997 !
பொலிஸாரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் மக்கள் புகார் தெரிவிப்பதற்காக 1997 என்ற தொலைபேசி இலக்கத்தை இன்று முதல் பொது மக்களுக்காக , பதில் பொலிஸ் மா அதிபர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த தொலைபேசி எண் , நீதி நடவடிக்கை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் ,பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயர்கல்வி நிறுவனங்களில் காழ்ப்புணர்ச்சி போன்றவை குறித்து உடனடியாகப் புகாரளிக்க முன்பு திறக்கப்பட்ட ஹாட்லைனாக இதுவரை காலமும் இருந்தது.
1997 என தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பொலிஸ் ஊழல் , பொலிஸ் அதிகாரிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊழலற்ற சட்டத்தை மதிக்கும் பொலிஸ் சேவையை உருவாக்குவதற்கு இது ஒரு புதிய நடவடிக்கை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.