உலகமே தயாராகும் ஹலோவீன் கொண்டாட்டம்
உலகின் பல நாடுகளில் ஹலோவீன் (Halloween) கொண்டாட்டம் பிரபலம்.
அயர்லந்து பாரம்பரியத்திலிருந்து அது தொடங்கியது.
ஹலோவீன் கொண்டாட்டத்துக்கு இப்போது பிரிட்டனில் கூடுதல் வரவேற்பு இருக்கிறது.
அங்குள்ள பண்ணை ஒன்றில் திரும்பும் திசையெங்கும் வண்ணமயம்.
அடுக்கடுக்காய் வைக்கப்பட்டுள்ள பூசணிகள். அவற்றைத் தேவைக்கு வாங்கி உருவங்களைச் செதுக்கலாம்.
கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக சர்க்கஸும் உண்டு.
இலையுதிர்காலத் தொடக்கம் குளிர்காலத்துக்கு வழியமைக்கும்.
அந்தப் பருவமாற்றத்தின் ஒரு பகுதியே மிரட்டலான அம்சங்கள் என்பது அயர்லந்தின் நாட்டுப்புற நிபுணர்களின் நம்பிக்கை.
சாத்தானுடன் சமரசம் செய்துகொண்ட கொல்லரைப் பற்றிய புராணமே பூசணியில் உருவம் செதுக்குவதற்கு அடிப்படை என்று நம்பப்படுகிறது.
ஹலோவீன் கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் மிரள வைக்கும் கதாபாத்திரங்கள்.
பயங்கரமாய் உடையணிந்த சிறுவர், சிறுமியர் வீடு வீடாகப் போய் இனிப்புகளைக் கேட்பது வழக்கம்.
அயர்லந்துக் குடியேறிகள் அந்த நாட்டுப்புறப் பழக்கத்தை அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றனர்.
பிறகு அது அமெரிக்கமயமாகி அட்லாண்டிக் முழுதும் பரவியது.
திகிலூட்டும் அந்தப் பண்ணையில் ஆங்காங்கே பல விநோத உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன.
அச்சப்படாமல் அவற்றைப் பார்க்கலாம் அல்லது பதுங்கிப் பயந்து படமும் எடுத்துக் கொள்ளலாம்.
வரும் 31 ஆம் தேதி ஹலோவீன் விழா கொண்டாடப்படுகிறது.