வடகொரியா ரஷ்யாவுக்கு உதவி : உக்ரேனுக்கு உதவத் தயாராகும் தென் கொரியா

வடகொரியா ரஷ்யாவுக்கு உதவுவதால், உக்ரேனுக்கு உதவப் போவதாகத் தென்கொரியா கூறியிருக்கிறது.

ரஷ்யாவுக்கு வடகொரியா 1,500 வீரர்களை அனுப்பியிருப்பதாகக் கடந்த வாரம் தென்கொரிய உளவுத்துறை சொன்னது.

அதைத் தொடர்ந்து உக்ரேனுக்கு நேரடியாக ஆயுதம் கொடுப்பது பற்றிப் பரிசீலிப்பதாகத் தென்கொரியா கூறுகிறது.

இளம் வீரர்களை ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனியப் போருக்கு அனுப்புவதன் மூலம் வடகொரியா குண்டர்கும்பலைப் போல் செயல்படுவதாகத் தென்கொரியா குற்றஞ்சாட்டியது.

குற்றச்சாட்டை வடகொரியா மறுத்தது.

ரஷ்யா உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவுமில்லை.

இந்நிலையில் ரஷ்யப் படையுடன் சேர்ந்து 12,000 வடகொரிய துருப்புகள் வரை போரில் கலந்துகொள்ளத் தயாராவதாய்த் தகவல் கிடைத்திருப்பதாக உக்ரேன் கூறியுள்ளது.

அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) நட்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

“ஐரோப்பாவில் நடக்கும் போரில் வடகொரியா தலையிடமுடியும் என்றால் போரை நிறுத்துவதற்குப் போதுமான நெருக்குதல் இல்லை என்று அர்த்தம்,” என அவர் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.