சிஐடியில் வாக்குமூலம் வழங்கி வரும் ஜோன்ஸ்டன் கைதாகாலாம்.. கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பிலானது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியமை தொடர்பாக , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு அவரது சட்டத்தரணிகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
அதன்படி இன்று கைதாகி காவலில் செல்ல ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தயாராகியே இரகசிய காவல் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்க வந்துள்ளார் என தெரியவருகிறது.