போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை.
01.04.2024 அன்று 10 ஈரானியர்கள், 02 பாகிஸ்தானியர்கள், ஒரு இந்தியர் , ஒரு சிங்கப்பூரர் மற்றும் 3 இலங்கையர்கள் , இலங்கைக் கடற்பரப்பில் 111 கிலோ 82 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதற்கு உதவிய மற்றும் உதவியதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து கைது செய்தனர் .
இந்த 17 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 19 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்ததுடன், சந்தேகநபர்களில் இருந்த 10 ஈரானிய சந்தேக நபர்களின் வழக்கு 23.10.2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்ட 10 ஈரானியர்களுக்கு , நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி , ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்
மற்ற சந்தேக நபர்களது வழக்கு 04.11.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.