யாழில் இரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆண் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவருக்குப் பல வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையிடையே வாந்தி ஏற்படுவது வழமை.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் 11 மணியளவில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.