பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!

போர் காரணமாகப் பாவனையின்றி காணப்பட்ட காணியின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றைத் துப்பரவு செய்யும்போது இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை காலை இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக 35 வருடங்களாகப் பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றைத் துப்பரவு செய்யும்போதே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.