ஜப்பான் தேர்தலில் சாதனை அளவில் பெண்கள் வெற்றி

ஜப்பானிய நாடாளுமன்றத் தேர்தலில் சாதனை அளவில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் 73ல் பெண்கள் வென்றுள்ளதாக அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியது.

இருப்பினும், அதிகாரபூர்வ முடிவுகள் வெளியான பின்னரே இது உறுதியாகும்.

2021 பொதுத் தேர்தலில் 45 பெண்கள் வென்ற நிலையில் இந்தத் தேர்தலில் அதைவிட அதிகமானோர் வென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

‘வேர்ல்ட் இக்கனாமிக் ஃபாரம்’ எனப்படும் உலகப் பொருளியல் கருத்துமன்றத்தில் வெளியிடப்பட்ட உலக பாலின இடைவெளி பட்டியலில் ஜப்பான் 118வது இடத்தில் உள்ளது.

அந்தப் பட்டியலில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.