மன்னாரில் கோலாகலமாய் நடைபெற்ற கலை கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய மாவட்ட கலை,கலாச்சார பண்பாட்டு விழா இன்று(29.10) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், விருந்தினர்கள் மேளதாளம் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன்,மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இருந்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வில் கூத்து வழி நடனம் கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, இசை நாடகம். நாட்டுக் கூத்து, போன்ற பல்வேறு கலைநிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் கலைஞர்கள் கொரவிப்பும் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலாளர் K. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்.
பிரதம விருந்தினராக. முன்னாள் மாவட்ட செயலாளர். ஸ்ரான்லி டிமெல்.
சிறப்பு விருந்தினர்களாக. AC வலன்ரைன், வலயக்கல்விப் பணிப்பாளர் மடு, M.பிரதீப்.பிரதேச செயலாளர் மன்னார், DC.அரவிந்தராஜ் பிரதேச செயலாளர் மாந்தை மேற்கு, திருமதி.கே.சிவசம்பு,பிரதேச செயலாளர் நானாட்டான்.
K.B.நிஜாகரன் பிரதேச செயலாளர் மடு,S.ரஜீவ் பிரதேச செயலாளர் முசலி. திருமதி. லாகினி நிருபராஜ் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடமாகாணம்.
கௌரவ விருந்தினர்களாக. திரு ஜெயசீலன் ஞானசீலன் பேராசிரியர் ஆங்கிலத்துறை. திரு நேவிஸ் மொராயஸ், பேராசிரியர் பொருளியல். சந்திரகாந்தா மகேந்திரநாதன் பேராசிரியர் தாவரவியல். மற்றும் மும்மதத் தலைவர்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.