கிணற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!
கிணற்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.