கேரள கிராமத்தில் கேட்ட பயங்கர சப்தம் காரணமாக 280 பேர் வெளியேற்றம்
கேரள மாநிலம் அனக்கல்லு கிராமத்தில் திடிரென கேட்ட பயங்கர சப்தத்தைத் தொடர்ந்து கிராமத்திலிருந்து சுமார் 280 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அனக்கல்லு கிராமத்தில், செவ்வாயக்கிழமை இரவு பயங்கர சப்தம் கேட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக 85 குடும்பங்களைச் சேர்ந்த 287 பேர், பாதுகாப்பான இடத்தில் இருந்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்கு முதலில் ஒரு முறை சப்தம் கேட்டுள்ளது. பிறகு, 10.15 மணிக்கும், 10.45 மணிக்கும் அடுத்தடுத்து ஒரு இடிச்சப்தம் போல கேட்டுள்ளது.
மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த சப்தம் கேட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் அச்சமடைநத்னர். இதைத் தொடர்ந்து, அதிரடிப் படையிர் அவ்விடத்துக்குச் சென்று அங்கிருந்த மக்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
புதன்கிழமை காலை, எந்த பிரச்னையும் இல்லாததால், மக்கள் கிராமத்துக்குத் திரும்பத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.