லொகான் ரத்வத்த குடும்பத்தை காணவில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை காணவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிரிஹான அமுதேனய பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

குறித்த காரின் செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த கார் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.