மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை – மாநில அரசு அதிரடி தடை
மயோனைஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தெலங்கானாவில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மயோனைஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
இதனிடையே, ஐதராபாத்தில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் பலியான நிலையில், 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயோனைஸால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் சில நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.
இதனால், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள தெலங்கானா அரசு, மாநிலத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது.