தேங்காய் கியுவுக்கு நாங்கள் பொறுப்பல்ல.. மஹிந்த.. ரணில்தான் பொறுப்பு – டில்வின் சில்வா.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும்தான் காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இப்போது நாங்கள் வந்து தேங்காய் வரிசையை உருவாக்கிவிட்டோம் என்று சொல்கிறார்கள். தென்னை மரத்தை வளர்த்த ஒரு மாதத்தில் தேங்காய் பறிப்பது உலகில் எங்காவது உண்டா? அநுரகுமார திஸாநாயக்க வந்து ஒரு மாதத்தில் அதை செய்ய முடியுமா?

எனவே, இந்த நாட்டில் தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்பு கூற வேண்டும். இவர்கள் செய்த தவறான பணியால், தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தென்னைகளுக்கு உரமிடவில்லை.

எனவே இந்த தோற்கடிக்கப்பட்ட நாட்டை அழித்த ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் இந்த புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை செய்யாதீர்கள். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமையான, படித்த, ஊழலற்ற பெரும்பான்மையான மக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப இந்த பொதுத் தேர்தலில் பாடுபடுங்கள்.

நூறு நல்லவர்கள் பாராளுமன்றம் சென்றாலும் பரவாயில்லை, ஒரு திருடன் பாராளுமன்றம் சென்றால் எல்லாம் முடிந்துவிடும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.