ஜனநாயக ஐக்கிய முன்னணி உதயராசா அணிக்கு ஆதரவு.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியானது ப.உதயராசாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஜாவித் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தோம். எனினும், வாக்குகளைச் சிதறடிக்கக்கூடாது என்ற காரணத்துக்காக வெல்லக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு எமது ஆதாரவைத் தெரிவிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

அந்தவகையில் ப.உதயராசாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணிக்கு எமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளோம்.

அவர்களின் வெற்றிக்காக நாம் எமது பகுதிகளில் தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களை முன்னெடுப்போம்.

அத்துடன் எமது ஆதரவாளர்கள் அனைவரும் தபால் பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தேசியக் கூட்டணிக்கும் அதன் வேட்பாளரான ப.உதயராசாவுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.