தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்குமாறு தமிழரசின் பதில் செயலாளரிடம் கையளித்த மாவை.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வுக்குச் சுகயீனம் காரணமாக வர முடியாததால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்குமாறு பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம் விஞ்ஞாபனத்தைக் கையளித்தார்.
இதன்போது தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் உடனிருந்தார்கள்.