“தம்பி என்ற உறவு வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்” – விஜய்யை சரமாரியாக விமர்சித்த சீமான்

தமிழீழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் நினைவுநாளையொட்டி சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்பி என்பது வேறு கொள்கை என்பது வேறு என்று தெரிவித்தார். ஏற்றத்தாழ்வு குறித்து பேசிய போது, நீ கடவுளே ஆனாலும் நீ எதிரி தான். ரத்த உறவை விட கொள்கை உறவே பெரிது. கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் பகைவர்கள் தான் என்று பேசினார்

விசிக தவெக கூட்டணி என பேசப்பட்டுவருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, என்னிலும் முதிர்ந்தவர் என்னிலும் அரசியல் அறிவு பெற்றவர் திருமாவளவன், அவரிடம் பாடம் கற்றவர் நாங்கள். எங்கள் வாத்தியார் அவர் எனவே அவர் தவறு செய்ய மாட்டார் என பதில் அளித்தார்.

தவெகவிற்கு கூடிய கூட்டம் குறித்து பேசியபோது, விவசாயிகள் போராடி கொண்டிருந்தபோது, நடிகை நயன்தாரா கடை திறப்புக்கு 4 லட்சம் பேர் கூடினர். ஆகையால் கூட்டத்தை பற்றி பேச கூடாது. விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடிவிட்டது. கூட்டம் என்றால், எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அபோது எனக்கு தான் கூட்டம் அதிகம் என்று பேசினார்.

திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என விஜய்யின் கருத்து குறித்து பேசிய சீமான், விஜய்யின் மொழிக்கொள்கை தப்பாக உள்ளது. திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஒன்றாகும். வில்லனும், ஹீரோவும் ஒன்றா ?

விஜய் ரசிகர்கள் எனக்கு எப்படி வாக்கு செலுத்துவார்கள்? என் கொள்கையை ஏற்று அதன்படி எனக்கு வாக்கு செலுத்துவார்கள். ரசிகர்கள் வேறு கொள்கை போராளிகள் வேறு. என்னுடைய வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார்.

ஆந்திராவில் சுட்டுக் கொன்றது, மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட விஷயங்களில் விஜயின் நிலைப்பாடு என்ன என்று வினவிய அவர், ஒன்று கொள்கைகளை மாற்றுங்கள் அல்லது எழுதி கொடுப்பவரை மாற்றுங்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.

காங்கிரஸும், அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிரி இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ள சீமான், விஜயின் கொள்கைகள் தவறானது என்றும் விமர்சித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.