இறுதிகட்ட பிரசாரத்தில் டிரம்ப், கமலா.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் ஐந்தாம் தேதி நடக்கவுள்ள நிலையில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு அதிபர் வேட்பாளர்களும் விஸ்கான்சின் மாநிலத்தில் பிரசாரம் செய்தனர்.
விஸ்கான்சின் மாநிலம் இரண்டு தரப்புக்கும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. இதில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால் அவர் அதிபராகும் வாய்ப்புகள் சற்று கூடும்.
இருப்பினும் அண்மை ஆய்வுத் தரவுகள் இரண்டு வேட்பாளர்களுக்கும் சிறு அளவு வாக்கு வித்தியாசங்கள் தான் இருக்கும் என்று கூறுகின்றன.
அதே நேரத்தில் திரு டிரம்ப், விஸ்கான்சின் மக்களிடம் குடிநுழைவு குறித்து பிரசாரம் மேற்கொண்டார். அதன்பின்னர் எதிர்கட்சி தலைவர்களை தாக்கிப் பேசினார்.
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பிரசாரம் செய்து வருவதால் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.