IMF உடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அரசாங்கம்.. மறுபரிசீலனைஒத்திவைப்பு..
விலை சூத்திரத்திற்கு அமைய எரிவாயு விலை திருத்தம் செய்யப்படுவதைத் தடுக்க தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தற்போதைய உயர் எரிவாயு விலையுடன் ஒப்பிடுகையில், இந்தநாட்டில் எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்படாததால், நாட்டில் திரவ எரிவாயுவிற்பனை மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் அனைத்து திரவ எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லிட்ரோ கேஸ் நிறுவனமும் அடிப்படைச் செலவை ஈடுகட்டாமல் எரிவாயு வர்த்தகம் செய்து வருவதாகவும், இது சர்வதேச நாணய நிதியத்தின் விலைச்சூத்திரத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு இம்மாதம் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இந்த நிலைமைகள் காரணமாக அது தாமதமாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அடுத்த கடன் தவணையை நவம்பர் மாதம் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் அது தாமதமாகி வருவதாகவும்,ஆரம்ப செலவை ஈடுகட்டாமல் அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபடுவதே இதற்குக் காரணம் எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.