கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபற் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.