லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே,

அவசர சிகிச்சை காரணமாக நேற்று இரவு அவர் தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டசொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

Your email address will not be published.