மன்னாருக்குப் பிரதமர் ஹரிணி விஜயம்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதமரின் வருகையையொட்டி மன்னார் நகரப் பகுதியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும். மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் கடுமையான உடல் சோதனைக்கு உட் படுத்தப்பட்டனர்.